ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ்ஷிப் பொம்மன் இலச்சினை அறிமுகம்

ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ்ஷிப்
பொம்மன் இலச்சினை அறிமுகம்

சென்னை, ஜூலை.21, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் (Marina light House) அருகில் 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ்ஷிப்-2023 கோப்பை, "பொம்மன் இலச்சினை" (Bomman Mascot) அறிமுகம் மற்றும் "பாஸ் தி பால்" (Pass the Ball) தொடக்க விழா நடைபெற்றது. 
இந்த விழாவில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆசிய கோப்பையை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டும் செல்லும் வகையில் "Pass the Ball' நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். மேலும் ஆசிய கோப்பை பொம்மன் இலச்சினையை (Bomman Mascot) அறிமுகப்படுத்தி விழாப் பேருரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துனை மேயர் தமகேஸ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான் எபினேசர். ஆர்.டி.சேகர், பி. சிவகுமார், என்.எழிலன், எம்.கே. மோகன், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, ஜெ. கருணாநிதி, தா. வேலு. இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் முனைவர் அதுல்யா மிஸ்ரா, இ.ஆ.ப., ஹாக்கி இந்தியா தலைவர் பத்ம ஸ்ரீ டாக்டர் திலிப் டர்க்கி, செயலாளர் போலோநாத் சிங், பொருளாளர் சேகர் மனோகரன், மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர்  மேகநாத ரெட்டி, இஆப., அரசு அலுவலர்கள் மற்றும் முன்னனி ஒலிம்பிக் ஹாக்கி வீரர்கள் கலந்து கொண்டனர்.

Comments