இந்திய சமுதாய நல அமைப்பு சார்பில்
இளைஞர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி
சென்னை:ஜூலை.29, சர்வதேச மனித கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்திய சமுதாய நல அமைப்பு(ஐ.சி.டபிள்யூ.ஓ) சார்பில்
மனித கடத்தல் எதிர்ப்பு குறித்த இளைஞர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி மாநாடு
இந்திய சமுதாய நல அமைப்பின் நிறுவன செயலாளர் ஏ. ஜே. ஹரிஹரன் அவர்கள் தலைமையில் எழும்பூரிலுள்ள இக்சா மையத்தில் நடைப்பெற்றது.
மேலும் இந்த மாநாட்டில் சென்னை மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் த்துறை மற்றும் ஹெச். எஸ். எஃப் இந்தியா அறக்கட்டளை மூலம் இணைந்து நடத்தப்பட்ட மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பயிற்சி மாநாட்டில் ஏ. ஜே. ஹரிஹரன்
வரவேற்புரையாற்றி மாநாட்டின் நோக்கங்கள் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில்
மாண்புமிகு மாவட்ட நீதிபதியும், நிரந்தர லோக் அதாலத் தலைவருமான ஸ்ரீதேவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு துவக்கவுரையாற்றினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்ட
மாண்புமிகு முதுநிலை சிவில் நீதிபதி மற்றும் டி.எல்.எஸ்.ஏ செயலாளர் ஆர். தமிழ்செல்வி,
தொழிலாளர் 1 (அமலாக்கம்) பிரிவு உதவி கமிஷனர் ஏ.ஜெயலட்சுமி
ஹெச்.எஸ்.எஃப் இந்தியா அறக்கட்டளையின் திட்ட மேலாளர் முனைவர் டி.அருள் ரோன்கல்லி ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.
இறுதியில் ஐ.சி.டபிள்யூ.ஓ மற்றும் ஹெச்.எஸ்.எஃப் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரவீனா சாலமன் அவர்கள் நன்றியுரை நல்கினார்.
இந்த விழிப்புணர்வு பயிற்சி மாநாட்டில் சென்னையிலுள்ள 10 கல்லூரி களை சேர்ந்த 125க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், 20 கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment