இ.பரந்தாமன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் எழும்பூர் தொகுதியில் நிவாரண உதவிகள்

இ.பரந்தாமன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில்
எழும்பூர் தொகுதியில் நிவாரண உதவிகள்

சென்னை, டிச.11- எழும்பூர் தொகுதி  இ.பரந்தாமன், எம். எல்.ஏ., ஏற்பாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் 1,500 பெட்ஷீட், 1,500 புடவை, 1,500 கைலி, 1,500 பிரெட் பாக்கெட், 5 கிலோ கொண்ட 1,500 அரிசிப் பை உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கினார்கள்.
மிக்ஜாம் புயலால் பாதிக் கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள், எம். எல்.ஏ.க்கள் நேரில் சென்று மீட்புநிவாரண நடவடிக் கைகளில் ஈடுபட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்  இ.பரந்தாமன் கடந்த ஆறு நாட்களாக அத்தொகுதியில் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, பொதுமக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, மீட்புநிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, எழும்பூர் தொகுதிக்குட்பட்ட வார்டு எண்.61 இல் உள்ள அய்யாசாமி குடிசைப் பகுதி, வரதராஜபுரம், நரியங்காடு, லாங்க்ஸ் கார்டன் ரோடு மற்றும் ஆங்கிலோ இந்தியன் குவார்ட்டர்ஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, இ.பரந்தாமன், எம்.எல்.ஏ., ஏற்பாட்டில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் 1,500 பெட்ஷீட், 1,500 புடவை, 1,500 கைலி, 1,500 பிரெட் பாக்கெட், 5 கிலோ கொண்ட 1,500 அரிசிப் பை உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் எழும்பூர் தெற்குப்பகுதி முன்னாள் செயலாளர் .விஜயகுமார், முன்னாள் வட்டச்செயலாளர் ஆர். புருஷோத்தமன், எழும்பூர் தெற்குப் பகுதி முன்னாள் பொருளாளர் ந.கலையரசன், மாவட்டப் பிரதிநிதிகள் கமலக்கண் ணன், மா.காந்தி, 58வது வட்ட அவைத் தலைவர் வெ.மருதன், முன்னாள் ாவட்டப் பிரதிநிதி புரசை எஸ்.குமார், 77 (அ) வட்டத் துணைச் செயலாளர் ஆரோக்கியம், 108வது வட் டத் துணைச் செயலாளர் கே.சீனிவாசன், எழும்பூர் தெற்குப் பகுதி வர்த்தகர் அணி அமைப்பாளர் வெற்றிவேல், எழும்பூர் தெற்குப் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ஜே.சிலம்பர சன், 108 (அ) வட்ட இளை ஞரணி அமைப்பாளர் பு.சதிஷ்குமார், 58 (அ) வட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எல். சுகுமாரன், பகுதிப் பிரதிநிதி இளஞ்செழியன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் யு.விஜய போஸ், எழும்பூர் ரமேஷ், கி.புஷ்பராஜ், பிரம்மதேவன், கவிதா, சத்யகலா, பாலாஜி அன்பு மணி, கோமகன், மா.கார்த்திகேயன், அசினா பேகம், ஜெயகுமார், அமரசேகர், பிரபாகரன், தனபிரபா, கௌரிசங்கர், கணேசன், செங்குட்டுவன், விஜய் தேவராஜ், சதீஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், முன்னோடிகளும் கலந்து கொண்டனர்.

Comments