சென்னை,மார்ச்.7, தமிழ்நாடு அரசின் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் கடந்த மூன்றாண்டுகளாக நிலவும் நிர்வாக சீர்கேடுகளை களைய வேண்டுமென்றும் அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு எதிரான ஒருதலைபட்சமான நடவடிக்கைகளை கைவிடவேண்டும் உள்ளிட்ட கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் தமிழ்நாடு அரசு நேரடியாக தலையிட்டு துறையின் நிர்வாகத்தினை சீர்படுத்திட வேண்டுமென்பதை வலியுறுத்தியும் சென்னை, காயிதே மில்லத் மணி மண்டபத்திற்கு அருகிலுள்ள மின்சார வாரியத் திடலில் தமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரதத்தினை தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் கு. வெங்கடேன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்க மாநிலத் தலைவர். ஜே. பால் ஜெயக்குமார் தலைமை வகித்தார். இச்சங்கத்தின் மாநில செயலாளர் தி.செந்தில்குமார் வரவேற்று பேசினார். பொதுச் செயலாளர் இரா. இரமேஷ் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.
தமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்க முன்னாள் நிர்வாகிகள் இரா. சீனிவாசன், ப.அந்துவன் சேரல், பொ. கண்ணதாசன், பால் பாண்டி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர்கள் ச.டேனியல் ஜெயசிங், அண்ணா.குபேரன், ச.ஹேமலதா, மாவட்ட செயலாளர்கள் த. முத்துகுமாரசாமிவேல், அந்தோணி சாமி, இந்து சமய அறநிலைத் துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் தெ.வாசுகி, தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை சங்க மாநில தலைவர். பி.அம்பேத்கார், தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநிலத் தலைவர் வே. விஜயகுமரன், தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பநர்கள் சங்க மாநில செயலாளர் த.ஏழுமலை, உணவு பாதுகாப்பு அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் அ.தி.அன்பழகன், தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் உ.சுமதி, தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.என். நம்பிராஜன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜெ.வே.அருள்டேனியல், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். கற்பகம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு நிறைவுரையாற்றினார். தமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்க பொருளாளர் சீ. அண்ணாமலை நன்றி கூறினார்.
Comments
Post a Comment