துறையூர் பகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு அவர்கள் பிரச்சாரம்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட துறையூர் பகுதியில்
திமுக வேட்பாளர் அமைச்சர் நேரு அவர்களின் மகன் அருண் நேரு அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அருண் நேரு அவர்கள் துறையூர் அருகே உள்ள புத்தனிமாபட்டி கிராமத்தில் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் கோட்டாத்தூரா நடுவலூர் கீழக்குன்னுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்ற அருண்நேரு அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்வில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் முசிறி சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி தியாகராஜன் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் மற்றும் கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்
Comments
Post a Comment