பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஒத்தக்கடையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன் , சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார், குளித்தலை மாணிக்கம், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி , பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அருண் நேரு ஆகியோர் உடனிருந்தார்கள்.
இதில் பகுதிச் செயலாளர்கள், கோட்டத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment