அப்போலோ கேன்சர் சென்டரில் புற்றுநோய்க்கு ரோபோட்டிக் சைட்டோரிடக்டிவ் சிகிச்சை
சென்னை - மே.10, வயிற்றுறை மேற்பரப்பு (பெரிடோனியல் சர்ஃபேஸ்) புற்றுநோய்க்கு HIPEC என்ற கீமோதெரபி சிகிச்சையுடன் இந்தியாவின் முதல் ரோபோட்டிக் சைட்டோரிடக்டிவ் சர்ஜரி (CRS) என்ற அறுவைசிகிச்சையை அப்போலோ கேன்சர் சென்டரின் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள் ஒரு பெரிய மருத்துவ சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கின்றனர்.
ரோபோட்டிக் சாதன உதவியுடன் குறைவான ஊடுருவல் கொண்ட இந்த அணுகுமுறை, ஒரு தீவிரமான குடல்வால் புற்றுநோயான சூடோமைக்ஸோமா பெரிடோனி (PMP) என்ற பாதிப்பிற்கு அளிக்கப்படும் சிகிச்சையில் ஒரு புரட்சிகர மாற்றத்தை குறிக்கிறது. வேகமாக மீண்டு குணமடைதலை ஏதுவாக்கி மேம்பட்ட வாழ்க்கை தரத்தை நோயாளிகளுக்கு இது வழங்குகிறது.
அப்போலோ கேன்சர் சென்டரின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் மற்றும் ரோபோட்டிக் அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். அஜித் பை தலைமையிலான மருத்துவர்கள் குழு முதன் இந்த புதிய
அணுகுமுறையை செயல்படுத்தியிருக்கின்றனர்
51 வயதான இந்த பெண் நோயாளிக்கு இருபக்கங்களிலும் கருப்பை புற்றுக்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டதன் விளைவாக கருப்பை, முட்டையகங்கள் குடல்வால் மற்றும் உள்வயிற்றுப் பகுதியின் உதரமடிப்பின் ஒரு பகுதி ஆகியவற்றின் அகற்றல் உட்பட. ஒரு விரிவான அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது அதற்குப் பிறகு செய்யப்பட்ட பரிசோதனையானது. PMP உடன் குடல்வாலில் உயர்நிலை சளி நீர்ம புற்றுக்கட்டி இருப்பதை வெளிப்படுத்தியதால் கூடுதல் அறுவைசிகிச்சை செய்வது இவருக்கு அவசியமாக இருந்தது. எனினும், இடுப்புக்கூடு பகுதியிலும் மற்றும் முன்பெருங்குடலின் முதல் பகுதியிலும் அறுவைசிகிச்சைக்குப் பிறகும் சளி சீத புற்றுசெல்களும், ஜெலட்டின் போன்ற படிமங்களும் எஞ்சியிருப்பது கண்டறியப்பட்டது.
நோயாளியின் அடிவயிற்றுப் பகுதியின் உள்வரிப்பூச்சு (அகஉறைக்கு) பரவுவதற்கு குடல்வால் புற்றுநோய் கொண்டிருக்கும் தனித்துவமான போக்கின் காரணமாக, குறைவான ஊடுருவல் உள்ள ரோபோட்டிக் சைட்டோரிடக்டிவ் சர்ஜரி (அடிவயிற்று குழிக்குள் உள்ள புற்றுநோய் செல்களின் அளவைக் குறைப்பதற்கு) என்ற அறுவைசிகிச்சையை டாக்டர் அஜித் பை மற்றும் குழுவினர் இந்நோயாளிக்கு மேற்கொண்டனர் அத்துடன், குடல்வால் பகுதியை கொண்டிருக்கின்ற வலது முன்பெருங்குடல் பகுதியை அகற்றுவதும் மற்றும் பெருங்குடல் மற்றும் குடல்வால் பகுதியிலிருந்து உருவாகின்ற புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் அறுவைசிகிச்சையும் மற்றும் முழுமையான படலமடிப்புநீக்கறுவையும் (omentectomy) மற்றும் கீமோ மருந்துடன் சேர்த்து வெப்பம் ஏற்றப்பட்ட கீமோதெரபி சிகிச்சையும் இந்நோயாளிக்கு வழங்கப்பட்டன. அடிவயிற்றுக்கு உட்புறத்தில் மிக நுண்ணிய புற்றுசெல்கள் எஞ்சியிருக்கும் சாத்தியத்தை அகற்றுவதற்காக இத்தகைய சிகிச்சை செயல்முறைகள் மருத்துவ நிபுணர்களால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.
வழக்கமாக CRS/HIPEC சிகிச்சையானது. ஒரு திறந்தநிலையிலான விரிவான அறுவைசிகிச்சையாக மேற்கொள்ளப்படும். 10-12 அங்குல நீளத்திற்கு கீறல் போடப்படுவதால், நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது அவசியமாக இருக்கும். ஆனால், ரோபோட்டிக் சிஆர்எஸ் அணுகுமுறையில் மிகக் குறைவான கீறல் / ஊடுருவல் மட்டுமே இருப்பதால், குறிப்பிடத்தக்க ஆதாயங்களை இது வழங்குகிறது. ரோபோட்டிக் கருவிகளுக்காக 8 மி.மீ. என்ற மிகச்சிறிய கீறலை மருத்துவர்கள் பயன்படுத்தி வலி, இரத்தஇழப்பு. தழும்பின் அளவு மற்றும் அசௌகரியத்தை மிகவும் குறைத்தனர் கூடுதலாக, புற்றுக்கட்டிகள் மற்றும் துகள்களை அகற்றுவதற்கும் மற்றும் HIPEC -ஐ வழங்குவதற்கும் ஒரேயொரு 5 செ.மீ அளவுள்ள கீறல் பயன்படுத்தப்பட்டது. இந்த புதுமையான அணுகுமுறை., வேகமாக மீண்டு குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு நோயாளி விரைவாக திரும்புவதை சாத்தியமாக்கியது. ஓராண்டுக்குப் பிறகு பரிசோதனைக்காக இந்நோயாளி திரும்ப வந்த நிலையில், செய்யப்பட்ட சோதனைகள் அவர் முழு உடல்நலத்தோடு புற்றுநோய் பாதிப்பு எதுவும் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்தன
அப்போலோ கேன்சர் சென்டரின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் மற்றும் ரோபோட்டிக் அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். அஜித் பை இது தொடர்பாக கூறியதாவது: "புற்றுக்கட்டிகளை துல்லியமாக அகற்றும் சிகிச்சைக்கு பாரம்பரியமான மற்றும் ரோபோட்டிக் உத்திகள் தேவைப்படுகின்ற ஒரு நிலைமாற்ற அணுகுமுறையை
ரோபோட்டிக் சிஆர்எஸ் வழங்குகிறது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு குறைக்கப்படுகின்ற நோய்த்தாக்கம் மிகக் குறைவான கீறல் மற்றும் விரைவான மீட்சி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்த வழிமுறை மட்டுப்படுத்தப்பட்ட வகையில் வயிற்றுறை மேற்பரப்புக்கு புற்று செல்கள் பரவி அதில் பதிந்திருக்கின்ற நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக இந்த வழிமுறை இருக்கிறது இதில் வெற்றிகரமான சிகிச்சை விளைவுகள் கிடைத்திருப்பது குறித்து நாங்கள் பெரும் உற்சாகம் கொண்டிருக்கிறோம் கர்ப்பப்பை பெருங்குடல் மற்றும் இரைப்பை பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்கள் உட்பட வயிற்றுரை மேற்பரப்பு புற்றுநோய்களால் அவதியுறும் நோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு இந்த அணுகுமுறை கொண்டிருக்கும் சாத்தியத்திறன் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தருகிறது
இத்தகைய புற்றுநோயை வென்றிருக்கும் சுபர்ணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேசுகையில், என்னை அக்கறையோடு கவனித்து. சிகிச்சையளித்த மருத்துவர்களின் ஒட்டுமொத்த குழு மீதும் நான் கொண்டிருக்கும் நன்றியுணர்வை ர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாது சிகிச்சைக்குப் பிறகு பாதிப்பிலிருந்து அதிவேக மீட்சியையும். நலத்தையும் நம்பிக்கையோடு இந்த முன்னோடித்துவ ரோபோட்டிக் அணுகுமுறை வழங்கியிருக்கிறது இந்த புத்தாக்க அணுகுமுறையினால் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவே நான் எனது வீட்டிற்கு திரும்பியிருக்கிறேன் சிகிச்சைக்குப் பிறகு முற்றிலும் இயல்பான நபராக நம்பிக்கையும். தைரியமும், புதுப்பிக்கப்பட்ட உணர்வினை கொண்டிருக்கிறேன். வாழ்க்கையையே மேம்படுத்தியிருக்கும் இந்த நிலைமாற்ற மருத்துவ செயல்முறையை எனக்கு வழங்கியதற்காக அப்போலோ கேன்சர் சென்டருக்கு எனது ஆழமான நன்றியை சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்
அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட்-ன் செயலாக்க துணை தலைவர் டாக்டர். பிரீத்தா ரெட்டி பேசுகையில் மிக நவீன தொழில்நுட்பம் பம் என்பது. மருத்துவம் சார்ந்த புதிரில் ஒரேயொரு பகுதி மட்டுமே என்பதை ACC ல் உள்ள நாங்கள் நன்கு புரிந்திருக்கிறோம் கிடைக்கப் பெறுகின்ற மிக நவீன, மேம்பட்ட தொழில்நுட்பங்களில் நாங்கள் முதலீடு செய்கிறபோதிலும் கூட, நிகரற்ற மருத்துவ சிகிச்சை நேர்த்தியின் பொக்கிஷத்தை உண்மையிலேயே திறந்து வெளிக்கொணர்வது திறன்மிக்க எமது மருத்துவர்கள் குழுவே தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் மருத்துவ நிபுணத்துவம் ஆகியவை ஒருங்கிணைவதால் கிடைக்கும் சக்தி வாய்ந்த
இந்த கூட்டு ஆற்றலே உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற நபர்கள் புற்றுநோயை வெல்வதை சாத்தியமாக்குகிறது என்று கூறினார்
Comments
Post a Comment