கணக்காளர்கள் சங்கம் சார்பில் பணி நிரந்தரம் வலியுறுத்தி பேரணி

சென்னை,ஆகஸ்ட்.22-
சென்னை எழும்பூர் எல்.ஜி.கார்டன் முதல் ஆர்.ஆர். ஸ்டேடியம் வரை கோரிக்கை 
பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு மாநில தலைவர் ஆர். சார்லஸ் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் மு.செ. கணேசன் கலந்து கொண்டு பேரணி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் அப்போது அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள12525 கிராம பஞ்சாயத்து பகுதியில் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் கீழ் பணிபுரிந்து வரும் வி பி ஆர் சி, பி எல் எப் கணக்காளர்களுக்கு பணி பாதுகாப்பு அளித்து பணி நிரந்தரம் செய்து மாத சம்பளமாக தமிழக அரசு தனி நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பெற்று வரும் சம்பளத்தை உயர்த்தி பிரதி மாதம் ரூபாய் 10000 மாத சம்பளமாக வழங்கிட தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
வி பி ஆர் சி, பி எல் எப் கணக்காளர்களு
க்கு அடையாள அட்டை மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக வழங்கிட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
வி பி ஆர் சி, பி எல் எப் கணக்காளர்களு க்கு அரசு நிதி மூலம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்
தினை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்து வரும் வட்டார மேலாளர்கள்/வட்டாரஒருங்கிணைப்பாளர்களை, பணி நிரந்தரம் செய்து மாத ஊதியமாக ரூபாய் 25 ஆயிரம் வழங்கிட வேண்டும் அரசு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் உதவி திட்ட இயக்குனர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியராக்கி அனைத்து சலுகைகளையும் வழங்கிட வேண்டும் என்றார். 
வாழ்த்துரை யினை தலைமைச் செயலக சங்க முன்னாள் தலைவர் செ.பீட்டர் அந்தோணிசாமி, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க அகில இந்திய தலைவர் கே. கணேசன், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் ஆர்.ரங்கராஜ் உட்பட பிற சங்கங்களில் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கே.ரவி, மாநில பொருளாளர் எஸ்.பெரியசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.குமரேசன்,த.நா. ஊராட்சி செயலாளர் சங்க மாநில செயல் தலைவர் எ.மணிராஜ், த.நா. ஊராட்சி செயலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ். ராஜ்குமார் உட்பட சுமார் 3500 மேற்பட்ட மகளிர் இந்த கோரிக்கை பேரணியில் கலந்து கொண்டனர்.

Comments