அகில பாரதிய சத்திரிய மகா சபா சார்பில்
நலத்திட்ட உதவி வழங்கும் விழா
சென்னை : அகில பாரதிய சத்திரிய மகா சபா தமிழ்நாடு பிரிவின் சார்பில் சத்திரிய சாதனையாளர்களுக்கு விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு சத்திரிய மகா சபாவின் தலைவர் டாக்டர் எம்.கே. குணா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அகில இந்திய சத்திரிய மகா சபா தலைவர் ராஜா மனவிந்தர் சிங், பொதுச்செயலாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பள்ளி கல்லூரி தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சத்திரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் தொழில் துறையில் சிறந்து விளங்கும் சத்ரிய சமூகத்தினருக்கு சிறந்த தொழில் முனைவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மத்திய மாநில அரசுகள் கல்வி, வேலை வாய்ப்புகளில் சத்திரிய சமுதாயத்தினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி சத்திரிய சமூகத்தினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள சத்திரிய சமூகத்தினரை ஒன்றிணைத்து அகில பாரதிய சத்திரிய சபாவை வலிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அகில இந்திய சத்ரிய மகா சபா தமிழ்நாடு பிரிவு மாநில செயலாளர் லயன் கே.கணபதி,திருவள்ளூர் மாவட்ட தலைவர் லயன் எஸ்.குமார் , மாவட்டச் செயலாளர் லயன் எல்.சந்திரசேகர் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான சத்ரிய சமூகப் பிரதிநிதிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment