சென்னை, டிச.16, சென்னை கிண்டியில் உள்ள டான்சியா தொழிற்பயிற்சி அரங்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், டான்சியா, ஐ.டி.கே. ஆட்டோமேட்டிவ் சொலுஷன் மற்றும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கம் (AOBOOA) இணைந்து, முன்னாள் ராணுவத்தினருக்காக பிரத்யேகமாக இலவச ஓட்டுநர் வேலை வாய்ப்பு சிறப்பு மேளா நடைபெற்றது.
சிறப்பு மேளாவில் கலந்து கொண்ட தமிழ் நாடு அபெக்ஸ் ஆட்டோ ஸ்கில்ஸ் இயக்குனர் சிசில் பிரேமி,டான்சியா தலைவர் சி.கே.மோகன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக அதிகாரி டாக்டர் சார்லஸ், ஐ.டி.கே. ஆட்டோமோடிவ் சொலுஷன்ஸ் இயக்குநர் டாக்டர் ஜோசப், டி.எப்.எஸ்.சி. செயல் அதிகாரி செந்தில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்க தலைவர் எஸ். இளங்கோவன், நிறுவன தலைவர் பாண்டியன், சேர்மேன் டி. இளங்கோவன், கவுரவத்தலைவர் பொன் பாஸ்கர், செயலாளர் மகேந்திரன், தென் மண்டல நைனார் ராவுத்தர், பொருளாளர் மன்சூர் ஷா, துணை தலைவர் மணிகண்டன், முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க பெத்தபெருமாள் ஆகியோர் பயிற்சி குறித்து விளக்க உரையாரையாற்றினர்.
தமிழ் நாடு அரசு சார்பில் நடத்தபட்ட இந்த சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த LMV, MMV, HMV லைசென்ஸ் பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள், மற்றும் பொது ஓட்டுனர்களும் பங்கேற்றனர். முகாமில் தகுதியான ஓட்டுனர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 3 நாட்கள் RPL பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியை முடிக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கும், பொது ஓட்டுநர்களுக்கும் சான்றிதழுடன், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்க நிர்வாகிகளின் ஆம்னி பேருந்துகளில் ஓட்டுநராக பணியாற்ற பணி ஆணை வழங்கப்படும்.
இந்த பயிற்சியை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), டான்சியா எப்.என்.எப். சேவை மையம் மற்றும் ITK ஆட்டோமோட்டிவ் சொல்யூஷன்ஸ் ஆகியவை இணைந்து நடத்துகிறது.
தமிழக அரசும், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கமும் இணைந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும்வகையில், சிறப்பு வேலை வாய்ப்பு மேளா நடத்துவது நாட்டிலேயே முதல் முறையாகும்.
Comments
Post a Comment