திமுக வேட்பாளர் இளங்கோ பிரசாரம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில்  இளங்கோ  போட்டியிடுகிறார்.  திமுக வேட்பாளர்  நெடுங்கூர் ஊராட்சி,க.பரமத்தி ஊராட்சி, ஆரியூர் ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று பொது மக்களை சந்தித்து ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் ஆட்சி அமைந்தால் கொண்டுவரப்படும் திட்டங்கள் குறித்து பேசி பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து பொதுமக்களிடம் அவர்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகளை கேட்டறிந்த திமுக வேட்பாளர் ஆட்சி அமைந்த உடன் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ பேசுகையில், உங்கள் பகுதிக்கு அங்கன்வாடி கட்டிடம் அமைத்துக் கொடுத்தோம், உங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை சமுதாயக்கூடம் வேண்டும் என்று அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் 65 சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளது.

மேலும் வருகின்ற நிதியாண்டில் சமுதாயக்கூடம் அமைத்து தரப்படும் என்று உறுதி அளிக்கிறேன், கூட்டுக் குடிநீர் திட்டம் முறையாக வருவதில்லை அதற்கு தனி சிறப்பு நிதியை பெற்று ஆறு மாத காலத்தில் ஒவ்வொரு ஊராட்சியாக குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன் எனக்கூறினார்.


Comments